நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து - 10 பேர் பலி
மகாராஷ்டிராவில் மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் ஜூலை 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பயங்கர விபத்து நடைபெற்றுள்ளது. துலே மாவட்டத்தில் உள்ள ஷிர்பூர் தாலுகாவில் மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த லாரி பல வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 28க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Tags :