கைவினைஞர் தலைமுறைக்கு அநீதி செய்கிறது திமுக அரசு-தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்
விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த மறுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாத முதல்வர் ஸ்டாலினின் முடிவு கண்டிக்கத்தக்கது. பாரம்பரிய கைவினைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். அரசியல் காரணங்களுக்காக கைவினைஞர் தலைமுறைக்கு அநீதி செய்கிறது திமுக அரசு" என்று கூறியுள்ளார்.
Tags : தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்