அடுத்த பத்து நாட்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

by Editor / 30-04-2021 04:12:05pm
அடுத்த பத்து நாட்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

 


சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்சென்னை எழும்பூரில் உள்ள தாய்சேய் நல மருத்துவமனையில் 250 ஆக்சிசன் கூடிய படுக்கையை வசதிகளை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு  அவர் கூறியதாவது, மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டும் அரசு மூலம் ரெம்டெசிவர் மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து அவசியம் இல்லை .நோய் பாதித்த 30 சதவீத நோய்களுக்கு மட்டுமே இந்த மருந்து தேவைப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த பத்து நாட்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என கூறினார்.

 

Tags :

Share via
Logo