சோனியா காந்திக்கு கொரோனா தொற்று

by Staff / 02-06-2022 04:37:05pm
 சோனியா காந்திக்கு கொரோனா தொற்று

நாடு முழுவது கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை மிகுதியாக உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியாகியுள்ளதாக சோனியா காந்தி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது சோனியா காந்தியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via