சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

by Staff / 14-10-2024 04:28:03pm
சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

விருதுநகர் மாவட்டத்தில் கனமழை காரணமாக சதுரகிரி வனப்பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வரும் 15 முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் எனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories