லாரி மீது பைக் மோதி விபத்து: வாலிபர் பலி
தூத்துக்குடி மாவட்டம், நாரைகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் ஆறுமுகத்துரை (38), இவர் தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோடு மடத்தூர் அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதில் லாரி மீது பைக் மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த சின்னகண்ணுபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் ஆனந்தராஜ் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :










.jpg)








