பவானி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (56). இவர் குறிச்சி பெரியாண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைப்பார்த்து வந்தார்.
தலைமை ஆசிரியர் பாஸ்கரன் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியர் பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
Tags :


















.jpg)
