கொழுப்பை கரைக்கும் சின்ன வெங்காய புதினா துவையல்

by Staff / 18-05-2022 03:33:30pm
கொழுப்பை கரைக்கும் சின்ன வெங்காய புதினா துவையல்


தேவையான பொருட்கள்:     

சின்ன வெங்காயம் - 50 கிராம்,  

 கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 12,  
கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  

புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும்.பின்னர் அதில் உரித்த சின்ன வெங்காயம், புதினா, கறிவேப்பலை, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.

வேக வைத்தவற்றை நன்கு ஆறவிடவும்.மிச்கியில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.சத்தான சுவையான சின்ன வெங்காய புதினா துவையல் ரெடி.
 

 

Tags :

Share via