மகளிர் உரிமைத் தொகை 7ஆவது தவணை இன்று வருகிறது

by Editor / 15-03-2024 09:16:48am
மகளிர் உரிமைத் தொகை  7ஆவது தவணை இன்று வருகிறது

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் 7ஆவது தவணை இன்று (மார்ச் 15) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குகிறது. இந்தத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 6 மாதங்கள் தலா ரூ.1,000 என இதுவரை தமிழக அரசு சார்பில் ரூ.6,000 வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் மாதத்திற்கான உரிமைத் தொகை இன்று வரவு வைக்கப்பட உள்ளது.

 

Tags : 7ஆவது தவணை

Share via