அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்: கமல்ஹாசன் அறிக்கை

by Staff / 04-06-2024 05:55:15pm
அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்: கமல்ஹாசன் அறிக்கை

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி முகத்தில் உள்ளது. இதையடுத்து திமுக அரசுக்கு நடிகரும், மநீம கட்சி தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் அறிக்கையில், “திமுக அரசு செய்த பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி அறுவடை செய்திருக்கிறது. 2019 தேர்தல் தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை குவித்த அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும் ஒளியும் காட்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo