நீங்கள் பிரதமர் ஆவீர்களா ? என் உயரம் என்ன என்று எனக்குத் தெரியும் -முதலமைச்சர். மு க ஸ்டாலின்

by Admin / 04-06-2024 07:20:09pm
 நீங்கள் பிரதமர் ஆவீர்களா ? என் உயரம் என்ன என்று எனக்குத் தெரியும் -முதலமைச்சர். மு க ஸ்டாலின்

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் 40 தொகுதிகளில் பெற்ற வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்முகமாகநடந்த சந்திப்பு நிகழ்வு . தொண்டர்களின் ஆரவாரமும் விண்ணை பிளக்கும் பட்டாசுகளின் சத்தத்துக்கிடையே முதலமைச்சர். 40 இடங்களில் சொல்லியபடியே வெற்றியைப் பெற்றதை குறித்து பெருமிதமாக உற்சாகமாக உரையாற்றினாா்.  மக்களை பிளவுபடுத்தி உளவியல் ரீதியாக பலகீனப்படுத்திய பாஜகவிற்கு தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைப்பை தகர்த்து விட்டதாகவும் கூறினார்.75 ஆண்டுகாலம் மக்களுக்கு பாடுபட்ட திமுகவிற்கு மக்கள் மதிப்பளித்து வாக்களித்து உள்ளதாகவும்  அரசியல் அமைப்பை மாற்றி விடலாம் என்று மோடி நினைத்ததற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து விட்டதாகவும் பாரதிய ஜனதா கட்சியினுடைய கருத்துக்கணிப்பு என்கிற உளவியல் தாக்குதல்களை எல்லாம் முறியடிக்கப்பட்டு விட்டது.என்றும்நாளை தினம் டெல்லியில் உள்ள இந்திய கூட்டணி கட்சியினர் கூட உள்ளதாகவும் நானும் அதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் சொல்லியதோடு நீங்கள் பிரதமர் ஆவீர்களா என்ற செய்தியாளர் கேட்ட கேள்விக்கு என்னுடைய உயரம் என்ன என்று எனக்குத் தெரியும் என்கிற பதிலையும் முதல்வர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories