தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தன 

by Editor / 24-04-2021 05:44:46pm
தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தன 

 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன. இரண்டு லட்சம் கோவிஷீல்டும், இரண்டு லட்சம் கோவாக்சினும் வந்துள்ளன. இந்த மருந்துகள் அந்தந்த மாவட்ட மையங்களுக்கு அனுப்பப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு இதுவரை 67,85,130 கொரோனாதடுப்பூசி மருந்துகள் வந்த நிலையில், 52,06,836 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு  மேலும் 4 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்ததால் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது. 
கொரோனா தடுப்பூசி மருந்துகளின் தற்போதைய கையிருப்பு சுமார் 13 நாட்களுக்கு மேல் போதுமானது என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 

 

Tags :

Share via

More stories