மகரம் ராசி-மாத ராசிபலன்

by Admin / 01-03-2026 05:44:18pm
மகரம் ராசி-மாத ராசிபலன்

சூரியன் 02ல் இருப்பதால் பேச்சுக்களை குறைத்து கொண்டு காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படவும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. சூரியன் 15.03.2026 முதல் 03ல் இருப்பதால் உலகியல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலத்தை உணர்ந்து சில பணிகளை செய்து முடிப்பீர்கள். செவ்வாய் 02ல் இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். புதன் 02ல் இருப்பதால் பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுக்கிரன் 03ல் இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். தொழில்நுட்ப விஷயங்களில் கவனம் வேண்டும். 27.03.2026 முதல் சுக்கிரன் 04ல் இருப்பதால் வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். குரு 06ல் இருப்பதால் எதிர்பாராத தனவரவு உண்டாகும். சனி 02ல் இருப்பதால் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். 06.03.2026 முதல் சனி 03ல் இருப்பதால் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ராகு 02ல் இருப்பதால் வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். கேது 08ல் இருப்பதால் பணிபுரியும் இடத்தில் சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். 

 

 

Tags :

Share via