தனுசு ராசி-

by Admin / 01-07-2025 05:44:18pm
தனுசு ராசி-

சூரியன் 07ல் இருப்பதால் இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். 17.07.2025 முதல் சூரியன் 08ல் இருப்பதால் தேவையற்ற விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிலும் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. செவ்வாய் 09ல் இருப்பதால் குண நலன்களின் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். 29.07.2025 முதல் செவ்வாய் 10ல் இருப்பதால் இணைய துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதன் 08ல் இருப்பதால் வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். 17.07.2025 முதல் புதன் 07ல் இருப்பதால் எதிராக இருந்தவர்கள் விலகி செய்வார்கள். மனதில் நினைத்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சுக்கிரன் 06ல் இருப்பதால் திடீர் செய்திகள் மூலம் அலைச்சல் ஏற்படும். எதிர் பாலின மக்கள் வகையில் ஆதரவின்மை உண்டாகும். 26.07.2025 முதல் சுக்கிரன் 07ல் இருப்பதால்  போட்டி பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குரு 07ல் இருப்பதால் நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சனி 03ல் இருப்பதால் சிறு சிறு வதந்திகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். ராகு 03ல் இருப்பதால் சவாலான காரியங்களையும் திறமையுடன் செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். கேது 09ல் இருப்பதால் மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும்.

 

Tags :

Share via