அமாவாசையில் எதனைச் செய்யலாம்..
அமாவாசையில் பிதுர்காரியங்கள் செய்வதுதான் சிறப்பு… அப்படியே, ஏதாவது நல்ல காரியம் செய்து தீர வேண்டும் எனும் கட்டாயம் வரும் பொழுது அமாவாசையை ஆறாகப் பிரித்து கடைசி காலத்தை நல்ல செயல்கள் செய்ய முனையலாம். திருமணம் போன்ற சுபகாரியம் கண்டிப்பாக அமாவாசையில் தவிர்க்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. அத்துடன், கூடுமானவரை நல்ல செயல்களுக்கு வளர்பிறை காலமே ஏற்றமுடையது. பிரதமை, அஷ்டமி, நவமி, செவ்வாய்க்கிழமை, ஞாயிறு போன்ற நாள்களை விலக்க வேண்டும்… இன்று திருமணத்திற்கு கிரகபிரவேசம், பிறந்தநாள் போன்றவற்றிற்கு ஞாயிற்றுக்கிழமையையே தேர்ந்தெடுக்கின்றனர். அதற்குக் காரணம் உறவுகள் ஓய்வு நாளாகயிருந்தால் வருவார்கள் என்பதனால் அந்நாளில் செய்கிறார்கள்… கூடுமானவரை புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் சுபகாரியங்கள் செய்வது உத்தமம்.
Tags :