பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சியா? அமைச்சர் பதில்

by Staff / 16-10-2022 02:31:33pm
பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சியா? அமைச்சர் பதில்

மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதாவது: பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது என்றார்.
 

 

Tags :

Share via