சென்னையில் 2.00 மணிக்கு நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

by Admin / 18-10-2023 01:04:43pm
சென்னையில் 2.00 மணிக்கு நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னை:  உலக கோப்பை ஒருநாள் போட்டி, நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையில்  இப்போட்டி பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது.

. உலக கோப்பை அணியில். நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம் (கீப்பர்/துணை கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, வில் யங்....ஆப்கானிஸ்தான்: ஹஷ்மதுல்லா ஷாகிதி (கேப்டன்), அப்துல் ரகுமான், அஸ்மதுல்லா உமர்ஸாய், பஸல்லாக் பரூக்கி, இப்ராகிம் ஸத்ரன், இக்ரம் அலிகில், முகமது நபி, முஜீப் உர் ரகுமான், நஜிபுல்லா ஸத்ரன், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரகமதுல்லா குர்பாஸ், ரகமத் ஷா, ரஷித் கான், ரியாஸ் ஹஸன்.இரு அணிகளும் 2 முறை மட்டுமே சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளன. சொந்த மண்ணில் 2015ல் நடந்த உலக கோப்பையில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இங்கிலாந்தில் 2019ல் நடந்த உலக கோப்பையில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆப்கானிஸ்தானை நியூசிலாந்து வீழ்த்தி உள்ளது. எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இதுவரை 25 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளதில் முதலில் பேட் செய்த அணி 10 ஆட்டங்களிலும், சேஸ் செய்த அணி 14 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.இதுவரை நியூசி இங்கு 5 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளது (ஒரு ஆட்டம் ரத்து).ஆப்கான் முதல்முறையாக சென்னையில் விளையாட உள்ளது.

 

சென்னையில் 2.00 மணிக்கு நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
 

Tags :

Share via