புதுச்சேரி பட்ஜெட் ஆகஸ்ட் 22ஆம் அன்று தாக்கல்

by Editor / 17-08-2022 03:54:55pm
புதுச்சேரி பட்ஜெட் ஆகஸ்ட் 22ஆம் அன்று தாக்கல்

2022 --2023 நிதி ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி வரும் 22ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதாக பேரவை தலைவர் செல்வம் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய நிலையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 22ஆம் நாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via