விருச்சிகம் ராசி

by Admin / 01-07-2025 05:42:22pm
 விருச்சிகம் ராசி

சூரியன் 08ல் இருப்பதால் எதிர்காலத்தை உணர்ந்து சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உலகில் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். 17.07.2025 முதல் சூரியன் 09ல் இருப்பதால் தகவல் தொடர்புத்துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். செவ்வாய் 10ல் இருப்பதால் சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். 29.07.2025 முதல் செவ்வாய் 11ல் இருப்பதால் நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். புதன் 09ல் இருப்பதால் இறைவழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கை கொடுக்கும். 17.07.2025 முதல் புதன் 08ல் இருப்பதால் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சுக்கிரன் 07ல் இருப்பதால் தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். 26.07.2025 முதல் சுக்கிரன் 08ல் இருப்பதால் சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை அளிக்கும். குரு 08ல் இருப்பதால் கட்டிடம் சார்ந்த பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். சனி 04ல் இருப்பதால்  வாசனை திரவியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு 04ல் இருப்பதால் பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். கேது 10ல் இருப்பதால் சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும்.

 

 

Tags :

Share via