துலாம் ராசி

சூரியன் 09ல் இருப்பதால் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். 17.07.2025 முதல் சூரியன் 10ல் இருப்பதால் பொதுப்பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். செவ்வாய் 11ல் இருப்பதால் விவசாய தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். 29.07.2025 முதல் செவ்வாய் 12ல் இருப்பதால் மறதி சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும். புதன் 10ல் இருப்பதால் மனதளவில் இருந்து வந்த இறுக்கங்கள் குறைந்து புதிய கண்ணோட்டம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குகள் அதிகரிக்கும். 17.07.2025 முதல் புதன் 09ல் இருப்பதால் சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். பூர்விக சொத்துக்கள் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுக்கிரன் 08ல் இருப்பதால் செயல்பாடுகளில் ஒரு விதமான தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளியூர் பயண வாய்ப்புகளில் மாற்றமான சூழல்கள் ஏற்படும். 26.07.2025 முதல் சுக்கிரன் 09ல் இருப்பதால் உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாகும். குரு 09ல் இருப்பதால் வெளிநாட்டு பண உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சனி 05ல் இருப்பதால் அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ராகு 05ல் இருப்பதால் ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கேது 11ல் இருப்பதால் உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
Tags :