கன்னி ராசி

சூரியன் 10ல் இருப்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும். 17.07.2025 முதல் சூரியன் 11ல் இருப்பதால் மனதில் புது விதமான ஆசைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். செவ்வாய் 12ல் இருப்பதால் விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். 29.07.2025 முதல் செவ்வாய் ராசியில் இருப்பதால் எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். புதன் 11ல் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். 17.07.2025 முதல் புதன் 10ல் இருப்பதால் அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். சுக்கிரன் 09ல் இருப்பதால் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். 26.07.2025 முதல் சுக்கிரன் 10ல் இருப்பதால் பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். குரு 10ல் இருப்பதால் தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சனி 06ல் இருப்பதால் கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ராகு 06ல் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். கேது 12ல் இருப்பதால் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
Tags :