சிம்மம் ராசி-2026
சூரியன் 07ல் இருப்பதால் பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். சூரியன் 15.03.2026 முதல் 08ல் இருப்பதால் மனதளவில் ஒரு விதமான கலக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். செவ்வாய் 07ல் இருப்பதால் தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். புதன் 07ல் இருப்பதால் வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுக்கிரன் 08ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். எதிர்கால சேமிப்பு பற்றிய சிந்தனைகள் மேம்படும். 27.03.2026 முதல் சுக்கிரன் 09ல் இருப்பதால் அழகு சாதன பொருள்களில் விழிப்புணர்வு வேண்டும். குரு 11ல் இருப்பதால் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சனி 07ல் இருப்பதால் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் ஏற்படும். 06.03.2026 முதல் சனி 08ல் இருப்பதால் வெளியூர் வர்த்தக பணிகளில் கவனம் வேண்டும். ராகு 07ல் இருப்பதால் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். கேது ராசியில் இருப்பதால் ஆன்மீக தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
Tags :



















