கடகம் ராசி

by Admin / 02-05-2025 05:38:34pm
கடகம் ராசி

மே மாத ராசிபலன்

சூரியன் 10ல் இருப்பதால் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த இன்னல்கள் குறையும். கல்வி கற்கும் நிலையில் மாற்றங்கள் ஏற்படும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். செவ்வாய் ராசியில் இருப்பதால் குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். புதிய தொழில் சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். புதன் 09ல் இருப்பதால் எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சித்திரை 17 முதல் புதன் 10ல் இருப்பதால் எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சுக்கிரன் 09ல் இருப்பதால் ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். குரு 11ல் இருப்பதால் நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சித்திரை 28 முதல் குரு 12ல் இருப்பதால் தனிப்பட்ட விஷயத்தில் விழிப்புணர்வு வேண்டும். சனி 08ல் இருப்பதால் எண்ணிய சில வேலைகள் முடிவதில் அலைச்சல் உண்டாகும். ராகு 09ல் இருப்பதால் உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அளவுடன் இருக்கவும். சித்திரை 13 முதல் ராகு 08ல் இருப்பதால் வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்கள் பிறக்கும். கேது 03ல் இருப்பதால் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சித்திரை 13 முதல் கேது 02ல் இருப்பதால் குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

 

Tags :

Share via