மிதுனம் ராசி -2026மாத ராசிபலன்

by Admin / 01-03-2026 05:37:50pm
மிதுனம் ராசி -2026மாத ராசிபலன்

சூரியன் 09ல் இருப்பதால் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் சோர்வுகள் உண்டாகும். சூரியன் 15.03.2026 முதல் 10ல் இருப்பதால் மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிலும் திருப்தியான சூழல்கள் உருவாகும். செவ்வாய் 09ல் இருப்பதால் வெளியூர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதன் 09ல் இருப்பதால் எண்ணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சுக்கிரன் 10ல் இருப்பதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். 27.03.2026 முதல் சுக்கிரன் 11ல் இருப்பதால் செல்வ வளம் மேம்படுத்துவது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குரு ராசியில் இருப்பதால் நினைவாற்றலில் இருந்த மந்தத்தன்மை விலகும். சனி 09ல் இருப்பதால் வித்தியாசமான சில சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். 06.03.2026 முதல் சனி 10ல் இருப்பதால் தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். ராகு 09ல் இருப்பதால் புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கேது 03ல் இருப்பதால் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். 

 

 

Tags :

Share via