ரிஷபம் ராசி-2025

ரியன் 02ல் இருப்பதால் கால்நடைகள் மூலம் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். 17.07.2025 முதல் சூரியன் 03ல் இருப்பதால் பயணங்கள் மூலம் புதிய அனுபவமும், ஆதாயமும் ஏற்படும். ஆடம்பரமான முயற்சிகளை தவிர்க்கவும். செவ்வாய் 04ல் இருப்பதால் நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். வணிகம் சார்ந்த துறைகளில் ஆதாயமும், அறிமுகமும் ஏற்படும். 29.07.2025 முதல் செவ்வாய் 05ல் இருப்பதால் உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. புதன் 03ல் இருப்பதால் உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்புகளில் மாற்றமான சூழல்கள் ஏற்படும். 17.07.2025 முதல் புதன் 02ல் இருப்பதால் நண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். விலையுயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சுக்கிரன் ராசியில் இருப்பதால் தோற்றபொழிவு குறித்த எண்ணம் மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். 26.07.2025 முதல் சுக்கிரன் 02ல் இருப்பதால் இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குரு 02ல் இருப்பதால் அடமான பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சனி 10ல் இருப்பதால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். ராகு 10ல் இருப்பதால் வியாபாரத்தில் புது யுக்திகளை செயல்படுவீர்கள். கேது 04ல் இருப்பதால் சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
Tags :