சீக்கிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சீக்கிய அமைப்பு கண்டனம்
நியூயார்க்கில் தலைப்பாகை அணிந்து சென்ற சீக்கிய முதியவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு சீக்கிய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
70 வயதான நிர்மல் சிங் என்பவர் சீக்கியர் கோவிலுக்கு சென்று திரும்பிய போது மர்மநபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தில் தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்தவரின் தலைப்பாகை மற்றும் ஆடைகளில் ரத்தம் காணப்படுகிறது இதுதொடர்பாக நியூயார்க் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Tags :














.jpg)




