வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

by Editor / 05-08-2022 03:40:34pm
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு துறை தகவல் வங்ககடலில் ஆகஸ்டு 7ஆம் நாள் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதையொட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வறட்சியின் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது .இதனால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via