ஆசிரியர் மீது பாலியல் புகார் மாணவிகளை தூண்டிய தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு-ஐஜி தகவல்.

by Editor / 02-11-2022 02:59:41pm
ஆசிரியர் மீது பாலியல் புகார் மாணவிகளை தூண்டிய தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு-ஐஜி தகவல்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் இரு ஆசிரியைகள் குறித்து மாணவிகள் சிலர் புகார் கடிதம் வந்துள்ளதாக தலைமை ஆசிரியர் அளித்த தகவலின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கடந்த ஆகஸ்ட் மாதம் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

*இந்நிலையில் இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இறுதி அறிக்கையை நீதிமன்றம் ஏற்று வழக்கை  முடித்துவைத்தது

வழக்கின் விசாரணையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மீது அங்கு பயிலும் மாணவிகள் சிலரை பயன்படுத்தி பொய் புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போக்சோ சட்டத்தை யார் தவறாக பயன்படுத்தினாலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கில் 80நாட்களுக்கு புலன் விசாரணை மேற்கொண்டு வழக்கை முடித்து உண்மையை கண்டறிவதில் பணிபுரிந்த காவல்துறையினருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories