அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் திமுக முன்னாள் எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி. ஜெயசந்திரன், சதானந்தம், கோபிநாத், கே.எஸ் பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 2023 ஆகஸ்ட் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கதுறை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை, 26 கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது. அதில் அமைச்சர் பொன்முடி, கன்புளியன்ஸ் நிறுவனம் அமன் நிர்வாக இயக்குநர் கவுதம சிகாமணி, கே.எம். ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அதன் நிர்வாக இயக்குநர் அசோக் சிகாமணி, கே.எஸ். மிணரல்ஸ் நிறுவனம், பி.ஆர்.எம் நிறுவனம் அதன் நிர்வாக இயக்குநர் கே.எஸ். ராஜ மகேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன், பொன்முடி, மற்றும் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மார்ச் 19ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தார்.
Tags :