பலூனை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35), இவரது மனைவி சிவகாமி (30), இவர்களின் 7 மாத ஆண் குழந்தை பிரகதீசன் வீட்டில் விளையாடியபோது மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. குழந்தை இறப்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை செய்ததில் பலூன் தொண்டையில் சிக்கியதால் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.
Tags :