பெருந்துறை அருகே மயங்கி விழுந்த வாலிபர் பலி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மொளசி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சங்கர் (28) நந்தகோபால் (24) என்ற இரு மகன்கள் உள்ளனர். நந்தகோபால் பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் கோழிக் கடை வைத்து நடத்தி வருகிறார். பெருந்துறையில் உள்ள தம்பியின் கடைக்கு நேற்று காலை வந்த சங்கர், கடைக்குள் சென்று வெகு நேரம் ஆகி வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த போது, அங்கே அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக, அவரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :



















