ஜெயலலிதா கொலை செய்யப்பட காரணம்.. - ஓய்வு பெற்ற நீதிபதி ராமராஜன் பரபரப்பு
ஜெயலலிதாவுக்கு எந்த சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத்தான் ராம்குமாரை கொன்றுவிட்டனர். கடைசியாக ஜெயலலிதாவையும் கொன்றுவிட்டனர் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ராமராஜன் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில், சுவாதியை கொலை செய்ததன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இருக்கிறது. ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட பெண் வழக்கறிஞர் சுவாதிக்காகவும், ராம்குமாருக்காக அவரது அனுமதி இல்லாமலேயே அந்தப் பெண் வழக்கறிஞரின் கணவரும் ஆஜரான போது தான் எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது. அதனால் தான் நான் இந்த வழக்கை கையில் எடுத்தேன் என்கிறார் ராமராஜன்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் சுவாதியை கொலை செய்தது பெங்களூரில் இருந்து வந்த கொலையாளிகள் தான் என்று அப்போதே தெரிவித்திருந்தார். சுவாதியை கொன்றவர்களே ராம்குமார் கொண்டிருக்கின்றனர். ராம்குமாரை கொன்றவர்களே ஜெயலலிதா மரணத்திற்கும் காரணம். அதனால் சுவாதி மரணத்துக்கான காரணத்தை அறிந்தாலே ஜெயலலிதா மரணத்திற்கான காரணத்தை அறிய முடியும் என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி ராமராஜன்.
சுவாதியின் கொலையை மூடி மறைக்கிறார்கள். சுவாதியின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்தால் உண்மை தெரியும். சாதாரண அரிவாளை வைத்து அதுபோல் வெட்ட முடியாது. சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை போன்று சுவாதி கொல்லப்பட்டிருக்கிறார் . ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயன்படுத்தும் வாளை கொண்டு வெட்டினால் தான் இது போன்ற பெரிய காயம் ஏற்படும் . சுவாதியை ஒருவர் கொன்றிருக்க முடியாது. இதில் நான்கு பேர் அல்லது ஐந்து பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். இருவர் சுவாதியை பிடித்துக்கொண்டு மேலும் இருவர் வெட்டி இருக்க வேண்டும் என்கிறார்.
மேலும், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் இந்த கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளை காப்பாற்றினார். முதலில் தொலைக்காட்சியில் முத்துக்குமார் என பிரேக்கிங் செய்தியை கொடுத்தார்கள். அதன்பிறகு ராம்குமார் என்று மாற்றினார்கள். போலீசே அவரது கழுத்தை அறுத்தனர். ராம்குமார் தற்கொலைக்கு முயலவில்லை என்பது நாங்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொலையை நேரில் கண்டவர்கள் விரட்டப்பட்டனர். இது தொடர்பாக 2 முறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு முறை ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று ராமராஜன் கேள்வி எழுப்புகிறார்.
ராம்குமார் சிறையில் வைத்து தற்கொலை செய்யவில்லை. அவரிடம் நான் இரண்டு முறை பேசியிருக்கிறேன். அவர் சுவாதியை தான் கொலை செய்யவே இல்லை என்று சொன்னார் .
பெங்களூர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு அதிகாரி உதவியுடன் ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்க சிலர் முயன்றனர். அதே இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சுவாதிக்கு இந்த விஷயம் தெரிந்ததால்தான் அவரைக் குறிவைத்து கொன்றனர். இதற்கான ஆட்களை ஏற்பாடு செய்தது பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தான் என்று அதிரவைக்கிறார் ராமராஜன்.
சுவாதி கொலை வழக்கில் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் ராம்குமாரை கொன்றார்கள். ராம்குமார் மரணத்தில் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் வந்ததால்தான், சிறை அதிகாரிகளை அழைத்து விசாரிக்க நினைத்ததால்தான் ஜெயலலிதாவை கொன்றார்கள்.
ராம்குமார் கொலை வழக்கை நான் கையில் எடுத்த உடனேயே உளவுத்துறை என்னிடம் விசாரணை நடத்தியது . ஜெயலலிதாவின் தோழி கீதாவிடம் நான் பேசினேன் .அவர் ஜெயலலிதா மரணத்தில் அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்தார். சுவாதி மற்றும் ராம்குமார் கொலையில் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறினார்.
இந்த கொலை வழக்குகளை மூடிமறைக்க மத்திய அரசு பாஜக அரசும் அப்போதைய மாநில அதிமுக அரசு முயன்றன என்று அவர் அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்களை தெரிவிக்கிறார்.
ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை. சட்னியும் சாப்பிடவில்லை. அவர் வீட்டிலேயே 22ம் தேதி அன்றே கொலை செய்யப்பட்டு விட்டார். ராம்குமார் கொலை செய்யப்பட்டதால்தான் ஜெயலலிதா உடனடியாக கொலை செய்யப்பட காரணம். ராம்குமாரின் கொலையை யார் செய்தார்கள் என்று தெரியவந்தால் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தெரியவரும். அவரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள் என்பதும் தெரியவரும். முதல்வர் ஸ்டாலின் இந்தவழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார்.
Tags :