சிறந்த புகைப்படம் எடுக்க விவோ செல்போன் தரும் புதிய சாப்ட்வேர்

by Editor / 11-09-2021 08:06:13pm
சிறந்த புகைப்படம் எடுக்க விவோ செல்போன் தரும் புதிய சாப்ட்வேர்

விவோ செல்போன் நிறுவனம் தனது நீண்ட கால ஆராய்ச்சிக்கு பின்னர் மேம்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க தானே சுயமாக வடிவமைத்துள்ள புதிய ‘இமேஜிங் சிப் வி1’ புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்துள்ளது.

விவோ நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியும் செயல் துணைத் தலைவருமான ஹு பைஷன் கூறுகையில், வி1 என்பது முற்றிலும் தனிப்பயனாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஒரு சர்க்யூட் சிப் ஆகும். இது நல்ல தரமான மற்றும் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்காக அர்ப்பணிக்க பட்டுள்ளது. இந்த சிப்பை எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு நீண்ட கால ஆராய்ச்சிக்கு பின்னர் அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களின் சிறந்த புகைப்பட தேவை களை பூர்த்தி செய்யும் விதமாக விவோ நிறுவனம் எக்ஸ்60 மாடல் ஸ்மார்ட்போனை ஜீயஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. மேம்பட்ட மற்றும் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கான சிறந்த ஸ்மார்ட்போனாக எக்ஸ்60 மாடல் ஸ்மார்ட்போன் திகழ்கின்றன என்றார் அவர்.

 

Tags :

Share via