பல்லில் தங்கம் கடத்தல்: டெல்லி விமான நிலையத்தில் 2 பேர் கைது

by Editor / 11-09-2021 08:02:26pm
பல்லில் தங்கம் கடத்தல்: டெல்லி விமான நிலையத்தில் 2 பேர் கைது

வாயில் மறைத்துக் கடத்தப்பட்ட 951 கிராம் தங்கப் பற்களை டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இருவரிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வாயில் பற்களை போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories