செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி  திருவிழா கொடியேற்றம்.

by Admin / 06-04-2024 12:17:30am
 செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி  திருவிழா கொடியேற்றம்.

 

தென்னகத்தில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  ஸ்ரீசெண்பகவல்லி  அம்மன் உடனுறை ஸ்ரீ  பூவனநாத சுவாமி கோவில் பங்குனி   திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது.பின்னர் அம்பாள் சுவாமி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று கொடி பட்டத்திற்கு சிறப்பு தீபாராதனை செய்து கொடி பட்டம் கோவில் வலம் வந்து கொடி பட்டத்திற்கு பால் தயிர் மஞ்சள் உள்ளிட்ட 11வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.பின்னர் காலை 6.00 மணிக்கு மேல் 6.30 க்குள் சுவாமி  சன்னதிக்கு எதிரில் உள்ள கொடி மரத்தில்  கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள், கொடிமரம், நந்தி, பலி பீடம், பரிவார மூர்த்திகளுக்கு பால் தயிர் மஞ்சள் திராவிய பொடி உள்ளிட்ட 11வகையான சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனைகள் நடைப்பெற்றது.

இந்த விழா இன்று 05.04.2024 தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு மண்டகபடித்தார்கள் சார்பில்  காலை 8.00 மணிக்கு இரவு 7:00 மணிக்கு சாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படித்தார்கள் சார்பில் விழாக்கள் நடைபெறும் 9ம் திருநாளான 13ம் தேதி  தேரோட்டம் காலை 8.30 மணிக்கு நடக்கிறது.

 . 10ம் நாளான 14ம் தேதி சித்திரை 1ம் தேதி  தீர்த்தவாரி தீபாராதனை பூஜையும் யானை வாகனம் அன்ன வாகனத்தில் சுவாமி அம்மன் திருவீதிஉலா வும் இரவு 12 மணிக்கு சுவாமி அம்மனும் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைப்பெற்றும்.11ம் திருநாளான 15ம் தேதி கோவில் திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் அனைத்து மண்டக படித்தாரர்களும் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர்  மற்றும் உறுப்பினர்கள்  ஆணையர் அன்புமணி,உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) செல்வி,கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் கோவில்  ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 

 செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி  திருவிழா கொடியேற்றம்.
 

Tags :

Share via