ஓடும் ரெயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்

by Staff / 17-10-2022 05:32:33pm
ஓடும் ரெயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லக்கூடிய பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை ஜோலார்பேட்டை வந்தது. அப்போது சேலம் ரெயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலீசார் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். இதில் முன் பதிவு செய்யப்பட்ட எஸ்.6 சீட்டு இருக்கை அடியில் இருந்த டிராவல் பேக்கை சோதனை செய்தனர். அப்போது 18 சிறிய பண்டலின் சுமார் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் கஞ்சா கடத்தியவர் குறித்து அந்த பெட்டியில் இருந்த ஒடிசா மாநிலம் சந்தன்பூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திர பிஸ்வால் என்பவரின் மகன் கைலாஷ் பிஸ்வால் (வயது 46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.ஒடிசா மாநில குல்பானி பகுதியில் இருந்து பெங்களூரில் விற்பனை செய்வதற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். சேலம் உட்கோட்ட ரெயில்வே பிரிவு போலீசார் வாலிபரை கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட 18 கிலோ கஞ்சாவையும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo