2026- தேர்தலில் கூட்டணி இல்லை -தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடும்.

by Admin / 10-10-2025 02:59:47am
 2026-  தேர்தலில் கூட்டணி இல்லை -தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடும்.

அதிமுக -பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் விஜய் தமிழக வெற்றி கழகம் தங்கள் கூட்டணிக்கு வரும் என்கிற ஒரு பேச்சை பொதுவெளியில் ஊகமாக உ லவி கொண்டிருந்த நிலையில், கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிர் இழந்த பின்பு அரசியல் களம் வேறு விதமான கண்ணோட்டத்திற்குள் சென்றது..  இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரக் கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் அவர்களுடையகொடி- பதாகைகளுடன் கலந்து கொண்டது தமிழக வெற்றிக்கழகம் அ.தி.மு.கவோடு கூட்டணியில் பங்கு ஏற்கும் என்கிற கருத்து பேசப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளரோ சூசகமாக இரு கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சொல்லியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது... இந்நிலையில்,த.வெ. க  தரப்பில் இருந்து 2026  தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடும் என்கிற நிலைப்பாட்டை தற்பொழுது அறிவித்துள்ளது..

 

Tags :

Share via