அறங்காவலர் குழு தலைவராக அரசியல் சாயமில்லாத நபர் தேர்ந்தெடுப்பு.

தென்காசி மாவட்டம், பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், இந்து சமய அறநிலையத் துறையால் நியமனம் செய்யப்பட்டுள்ள அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத பொது நபரான அருணாச்சலம் என்பவரை அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு திமுக கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், திமுகவினரின் இந்த செயலுக்கு பக்தர்கள் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே, வேறு வழி இல்லாமல் திமுகவினர் அரசியல் சாயம் இல்லாத அருணாச்சலம் என்பவரை தலைவராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டனர்.
குறிப்பாக, கோவிலுக்கு திருப்பணிகளை செய்யக்கூடிய ஒருவர்தான் அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற விதி இருப்பினும் அரசியல் நோக்கத்திற்காக இது போன்ற செயல்பாடுகளில் திமுகவினர் ஈடுபட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : அறங்காவலர் குழு தலைவராக அரசியல் சாயமில்லாத அருணாச்சலம் என்பவர் தேர்ந்தெடுப்பு.