டேட்டிங் செயலி மூலம் பணம் பறித்த 70பேர் கைது: சரக டிஐஜி தகவல்

by Staff / 01-09-2024 04:39:28pm
டேட்டிங் செயலி மூலம் பணம் பறித்த 70பேர் கைது: சரக டிஐஜி தகவல்

டேட்டிங் செயலி மூலம் பணம் பறித்த வழக்குகளில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 70பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூகுள் பிளே ஸ்டோரில் Grindr (Gay Dating & Chat) (Application) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இச்செயலியினால், முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு அதன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, ஆசை வார்த்தைகளைக் கூறி தனிமையில் சந்திக்கத் தூண்டி அதன் மூலம் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருகின்றனர். இது சம்மந்தமாக கிடைக்கப்பெறும் புகார் மனுக்களின்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நெல்லை சரகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், இந்த ஆண்டில் மட்டும் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 70 எதிரிகள் கைது செய்யபட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள்மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

Tags :

Share via