பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதலமைச்சர்

by Editor / 12-07-2021 09:18:29am
பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் மக்களின் கோரிக்கை மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

அதன்படி, ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் தொகுதியின் திட்டத்தின் கீழ் பெறப்ப்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி இன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories