அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

by Staff / 01-09-2024 04:55:49pm
அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. வாகனத்தின் வகையை பொறுத்து 5 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை, லாரிகளின் சரக்கு கட்டணம் உள்ளிட்டவை உயரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஓட்டுநர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டுமென லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

Tags :

Share via