"மாணவியருக்கு தனி கழிப்பறை வேண்டும்" பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவியருக்கு கட்டாயம் ஒரு தனி கழிப்பறை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று முதல் 'வாட்டர் பெல்' திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை கட்ட கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் மாணவியருக்கு தனி கழிப்பறையை ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Tags :