காதலனை மிரட்டி ரூ.2 லட்சம் கேட்ட இளம்பெண் கைது
பலாத்கார வழக்கில் சிக்க வைப்பேன் என மிரட்டி காதலனிடம் ரூ.2 லட்சம் பறிக்க முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் காதலனை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டியதற்காக இளம்பெண் கைது செய்யப்பட்டார். நேஹா தாகூர் என்ற பெயரில் இளைஞருடன் பழகி வந்த சோபியா, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு இளைஞர் சம்மதித்த நிலையில், போலீசில் பலாத்கார வழக்கு கொடுக்கப்போவதாக மிரட்டி ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞர் போலீசில் புகார் அளித்தார்.
Tags :


















