சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது
நீலகிரி, பந்தலூரில் சிறுத்தை தாக்கியதால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து வந்தனர். இதற்காக கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் புதரில் சிறுத்தை பதுங்கி இருந்தபோது கால்நடை மருத்துவர்கள் முதல் மயக்க ஊசி செலுத்தியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுத்தை இருக்கும் பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags :



















