மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

by Editor / 19-09-2021 10:32:23am
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தி வைத்திருந்த சலுகையை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட தொடங்கியது. இதனால் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. மருத்துவ பொருட்கள் உற்பத்திக்காகவும், தொற்று கட்டுப்பாட்டிற்காகவும் அதிக செலவுகளை சேட்டு வந்தது. இதனால் அதிக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை சமாளிக்கும் விதமாக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளை நிறுத்தி வைத்தது. மூன்று தவணைகளாக நிறுத்தி வைத்திருந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முதல் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இறுதியாக 17% ஆக இருந்த அகவிலைப்படி உயர்வு 28% ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் மாத ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மற்ற சலுகைகளும் வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 2,250 ரூபாய் முதல் உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உரிய ஆவணங்களை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

அதிகபட்சமாக இரு குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக 2,250 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை பெற முடியும். இந்த சலுகையை கொரோனா காலத்தில் மத்திய அரசு நிறுத்தி இருந்தது. குழந்தைகளுக்கான உதவித்தொகையை தற்போது எந்தவிதமான ஆவணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விஉதவித்தொகையின் மூலம் ஆண்டிற்கு ரூ.27,000 முதல் 54,000 வரை பெறலாம். 2020-21ஆம் நிதியாண்டிற்கான கல்வி உதவியை பெறாத அரசு ஊழியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தீபாவளிக்கு முன்னதாக உதவித்தொகை சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via