ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

by Editor / 19-09-2021 10:28:08am
ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு  தீர்வு

ரேஷன் கார்டு மூலமாக அரசின் உதவிடன் மிகக் குறைந்த விலைக்கு ரேஷன் பொருட்களை வாங்கிப் பலரும் பயன்பெறுகின்றனர். ஆனால் நிறையப் பேருக்கு ரேஷன் கார்டில் பிரச்னை ஏற்படுகிறது.

குறிப்பாக அதில் ஏதேனும் அப்டேட் செய்யவேண்டிய சூழல் ஏற்படும் போது, அதாவது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம், மொபைல் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது என்று பலர் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

இந்நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொதுச் சேவை மையங்கள் அமைப்பும் (சுவிதா) உணவு மற்றும் பொது விநியோகத் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டில் உள்ள பிரச்னைகளுக்கு பொதுச் சேவை மையங்களில் எளிதாகத் தீர்வுகாணலாம். ஆதார் இணைப்பும் இங்கே மேற்கொள்ள முடியும்.

ரேஷன் கார்டுக்கான டூப்ளிகேட் பெறுவது போன்ற பல்வேறு வகையான சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறமுடியும். என்னென்ன ரேஷன் பொருட்கள் கிடைக்கும் போன்ற விவரங்களையும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via