13 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் -மக்கள் அவதி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சௌந்தர சோழபுரத்தையும் அரியலூர் மாவட்டம் கோட்டக்காடு கிராமத்தையும் இணைக்கின்ற வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட மண்பாலத்தை வரி ஓடை, உப்பு ஓடை இரண்டு ஓடைகளிலும் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் மண்பாதை அடித்து செல்லப்பட்டதால் இரண்டு மாவட்ட கிராமங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லக்கூடிய போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி கிராமங்களுக்கு மக்கள் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.13 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க இரண்டு மாவட்ட பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : 13 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் -மக்கள் அவதி.