மணிப்பூர் கலவரத்தை திரைப்படமாக எடுக்கவேண்டும்- உத்தவ் தாக்கரே
மணிப்பூர் கலவரத்தை திரைப்படமாக எடுக்கச் சொல்கிறார் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து அவர் தமது கட்சி இதழான சாமனாவில் கூறியிருப்பதாவது- வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் காஷ்மீரை விட மோசமாக உள்ளது. மணிப்பூர் நிகழ்வு குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை நடத்தியதால்தான் பிரதமர் மோடி வாய் திறந்து உள்ளார். அண்மையில்தஸ்கன்ட் பைல்ஸ், திகேரளா ஸ்டோரி தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. ..அந்த படம் எடுத்தவர்கள் கண்டிப்பாக மணிப்பூர் பைல்ஸ் என்ற பெயரிலும் மணிப்பூர்மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டிப்பாக திரைப்படமாக எடுக்க வேண்டும் .மணிப்பூரில் ஒருவேளை மாற்று கட்சி ஆட்சி நடந்திருந்தால், அது இதற்குள்ளாக கலைக்கப்பட்டு இருக்கும். மணிப்பூர் பிரதமர் மோடிக்கு முக்கியமான மாநிலம் அன்று. அதனால் அவர் அதை புறக்கணித்து வருகிறார் .மணிப்பூரில் கிட்டத்தட்ட 60,000 க்கு மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கையை மீறி சென்று விட்டதாக கருத வேண்டி உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags :