திண்டுக்கல் பஸ்நிலையத்தில் 5 கடைகளுக்கு சீல்

by Staff / 15-10-2023 05:06:59pm
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் 5 கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட 164 கடைகள் உள்ளது. ஏலம் விடப்பட்டு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 16 ஆயிரம் வரை வாடகை வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் 54 கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வந்தனர். இதனால் சுமார் ரூ. 2¼ கோடி வாடகை பாக்கி ஏற்பட்டது.இந்த நிதி இழப்பு காரணமாக மாநகராட்சி திட்டப் பணிகள் செயல்படுத்த முடியாமல் நிர்வாகம் திணறியது. மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதும் காலம் தாழ்த்தும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் பஸ்நிலைய பகுதியில் உதவி வருவாய் அலுவலர் விஜயராகவன் தலைமையில் நகர அமைப்பு பொறியாளர் தன்ராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி வேட்டையில் இறங்கினர். அப்போது வாடகை பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் உடனடியாக ரூ. 10 லட்சம் வசூலானது.இதேபோல் திண்டுக்கல் மாநகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via