ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசளிக்கும் மாவட்ட நிர்வாகம் தடை.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு முற்றிலுமாக குறைக்கப்பட்டது. அதனால் கடந்த 10 நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4000 கன அடியாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு வினாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழை மற்றும் நீர் திறப்பு அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 10 நாட்களுக்குப் பிறகு, நேற்று காலை அதிகரித்து, வினாடிக்கு 12000 கன அடியாக அதிகரித்து. தொடர்ந்து மாலை 22,000 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி இருப்பதால் தண்ணீர் ஒகேனக்கல்லிலேயே தேங்கி வருகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் சுமார் 40 நாட்கள் நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், நீர்வரத்து குறைந்த பிறகு கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது நீர்வரத்து அதிகரிப்பால் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :